முள்ளி பகுதியில் விசேட அதிரடி படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயம்.

யாழ்ப்பாணம் − பருத்தித்துறை − முள்ளி பகுதியில் விசேட அதிரடி படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேகநபர்கள் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் துன்னாலை பகுதியைச் சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.