கொரோனா அபாயம் முற்றாக நீங்கவில்லை தடுப்பூசியை வழங்க பல நாடுகள் முன்வந்துள்ளன என்கிறது அரசு.

இலங்கைக்குக் கொரோனாத் தடுப்பூசிகளை வழங்க பல்வேறு நாடுகளும் முன்வந்திருக்கின்றன என்று அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது எனவும் அவர் கூறினார்.
ஆனால், நோய்ப் பரவலுக்கான அபாயம் முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முதலாவது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த அரசால் முடிந்திருந்தது. மக்கள் கூடுதலாக நடமாடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
திருமண நிகழ்விலும், இறுதிக்கிரியைகளிலும் மக்கள் கூடுதலான நேரம் தங்கியிருக்கக்கூடாது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகின்றது” – என்றார்.