விவேக் உடல்நிலை கவலைக்கிடம்… விளக்கமளித்த மருத்துவர்கள்..!
விவேக்கின் உடல் நிலை கவலைக்கிடமாக தான் உள்ளதாகவும், எக்மோ உதவியுடன் விவேக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை உடல்நிலையை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டி உள்ளதாக மருத்துவர் ராஜு சிவசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கிற்கு நேற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின், மாரடைப்பு ஏற்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வந்த நிலையில், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கும், அவரது மாரடைப்புக்கு எந்த வித தொடர்பும் இல்லை என, SIMS மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடிகர் விவேக் நேற்று இரவு 11 மணியளவில் சுயநினைவு இல்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில், அவரது இதயத்தின் இடதுபுற ரத்த குழாயில் 100 சதவீத அடைப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பின்னர், ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்து
அடைப்பு நீக்கப்பட்டது .
மேலும் தொடர்ந்து விவேக்கின் உடல் நிலை கவலைக்கிடமாக தான் உள்ளதாகவும், எக்மோ உதவியுடன் விவேக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை உடல்நிலையை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டி உள்ளதாக மருத்துவர் ராஜு சிவசாமி தெரிவித்துள்ளார். அதே போல் விவேக்கின் உடல் நிலை மோசமாகவே இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணனும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் விவேக் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.