விஜயதாஸவுக்கு கோட்டாபய அச்சுறுத்தல் விடுக்கவில்லை! – மஹிந்தானந்த கூறுகின்றார்.

“அமைச்சுப் பதவி கிடைக்காத காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கொழும்புத் துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.”
இவ்வாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொழும்புத் துறைமுக நகர் திட்டம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் விஜயதாஸ ராஜபக்சவுக்கு இருந்திருந்தால் அதனை ஆளும் கட்சிக் கூட்டத்தில் கேட்டிருக்க வேண்டும்.
மாறாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி அதில் தெரியாத விடயங்களைக் கூறி மக்களைப் பீதியடையச் செய்வது நியாயமற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, விஜயதாஸ ராஜபக்சவுக்குத் துறைமுக நகர் குறித்து விளக்கியுள்ள போதிலும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை.
விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்துவதைப் போன்று ஜனாதிபதி கோபாவேசமாக அச்சுறுத்தல் விடுக்கவில்லை” – என்றார்.