தெலுங்கு மற்றும் மலையாள பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்த விவேக் மரணம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விவேக் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இருதய துடிப்பு குறைந்ததை அடுத்து ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விவேக்கின் உட ல் நிலை குறித்து இன்னும் 24 மணி நேரம் கழித்தே உறுதியாக சொல்ல முடியும் என கெடு விதித்திருந்த நிலையில் , இன்று அதிகாலை 4.35 மணி அளவில் மரணமடைந்தார்.
இவரது உடல் இன்னும் சற்று நேரத்தில்… மேட்டுக்குப்பம் மின் தகன மையத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இவரது மரணம், தமிழ் திரையுலகை தாண்டி, தெலுங்கு மற்றும் மலையாள திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…
ட்விட்டர் பக்கத்தில் தங்களது இரங்கல்களை பகிர்ந்துள்ளனர்