விவேக்கின் உடல் பொலிஸ் மரியாதையுடன் சென்னை விருகம்பாக்கம் மின் மின்மயானத்தில் தகனம்.
நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதனால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காது இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி செலுத்தினர்.
விவேக்கின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து காவல் துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது ஏராளாமானோர் பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை ஏந்திச்சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் நடிகர் விவேக்கின் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. பின்னர் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே காவல்துறை சார்பில் விவேக் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கவுரவிக்க காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மகன் ஸ்தானத்தில் இருந்து மகள் தேஜஸ்வினி தந்தை விவேக்குக்கு இறுதி சடங்குகளை செய்தார்.
78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் நடிகர் விவேக்கிற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.