முத்தையா முரளீதரன் சென்னை மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளீதரன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரரும் உலக அளவில் முக்கியமான சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளீதரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றார்.
தொழில் வணிகத்தில் கவனம் செலுத்தி வந்த அவர் திரைப்படத்தில் தமிழக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று பிரச்சனை வெடித்தது.அவரும் விலகிக் கொண்டார். முத்தையா முரளீதரன் இலங்கையிலும் தமிழகத்திலுமாக தன் தொழிலை கவனித்து வந்த நிலையில் , சென்னையில் தன் குடும்பத்துடன் தங்கியிருந்த முத்தையா முரளீதரனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.