மாவடிப்பள்ளி பாலத்தை அண்மித்த ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!
மாவடிப்பள்ளி பாலத்தை அண்மித்த ஆற்றில் உள்ள முதலைகள் இரவு நேரத்தில் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள்ளும் செல்கின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மாவடிப்பள்ளி பாலத்தை அண்மித்த ஆற்றை விட்டு பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்டதும் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்டதுமான மாவடிப்பள்ளி பகுதியில் இரவு நேரங்களில் சுமார் 9,5,4 அடி நீளமுடைய பல முதலைகள் கரையில் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது விடயத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.