யாழ். மாவட்ட செயலகத்தில் அரசின் அழுத்தம் அதிகரிப்பு! மற்றுமொரு மூத்த அதிகாரி இடமாற்றம் கோரி விண்ணப்பம்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மற்றுமொரு மூத்த அதிகாரி தன்னை மாவட்ட செயலக நிர்வாகத்தில் இருந்து இடமாற்றக் கோரி அமைச்சுக்கு விண்ணப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குட்பட்ட நிர்வாகத்தின் கீழ் நீண்ட காலமாகப் பணியாற்றிய அதிகாரி ஒருவரே இவ்வாறு மாற்றலாகிச் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார்.
இவரது விண்ணப்பம் தற்போதுதான் சம்பந்தப்பட்ட அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அமைச்சால் இதுவரை அதற்கான பதில் வழங்கப்படவில்லை.
குறித்த இடமாற்ற விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டால் இடமாற்றலாகிச் செல்லும் அதிகாரியின் இடத்தைப் பிடிக்க சில அதிகாரிகள் தற்போதே முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புதிய அரசு பதவி ஏற்ற காலம் முதல் பலர் தூக்கி எறியப்படுவதும், மேலும் சிலர் அழுத்தம் காரணமாக இடமாற்றம் பெற்றுச் செல்வதும் அதிகரித்துள்ளமை தெரிந்ததே.