சீனாவை அரவணைத்து இந்தியாவைப் பகைத்து எதையும் செய்ய முடியாது!
சீனாவை அரவணைத்து இந்தியாவைப் பகைத்து எதையும் செய்ய முடியாது! – அரசிடம் சஜித் அணி சுட்டிக்காட்டு
கொழும்புத் துறைமுக நகரத்தை நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பிராந்திய வல்லரசான இந்தியாவைப் பகைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது எனவும் அவர் அரசிடம் சுட்டிக்காட்டினார்
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வருடத்தில் ஒருமுறை கோப் மற்றும் கோபா தெரிவுக்குழுக்களிடம் கொழும்புத் துறைமுக நகரின் கணக்காய்வுகளை முன்வைக்க வேண்டும் என்ற சரத்தைக் கொண்டுவர வேண்டும்.
கொழும்புத் துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டமானது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் உள்நோக்கத்தில் கொண்டு வரும் சட்டமாக இருக்கலாம் என வெளிநாடுகள் கூட சந்தேகம் வெளியிட்டுள்ளன.
அரசு இலங்கையில் சீனா கால் பதிக்க இடமளித்து வருகின்றது. பிராந்திய வல்லரசான இந்தியாவைப் பகைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது” – என்றார்.