பல இலட்சம் பெறுமதியான உயிர்களை பலியெடுத்த புகையிரதம்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2021/04/22122531/FB_IMG_1619073940785.jpg)
வவுனியா ஓமந்தை பகுதியில் 16 எருமை மாடுகளை ரயில் மோதியதில் அவை அனைத்தும் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலே ஓமந்தை பகுதியில் எருமை மாடுகள் மீது மோதியது.
இதன்போதே பல இலட்சம் பெறுமதியாக 16 எருமை மாடுகள் குறித்த இடத்திலேயே பலியாகியுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேய்ச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவை வீதியோரங்கள் ரயில் பாதைகளுக்கு அருகே உணவை தேடிய நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.