தேசிய நீர் வழங்கல் சபையின் வழிகாட்டலுடன் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்ப நிகழ்வு.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் அனுசரணையில் நாடளாவிய ரீதியில் தேசிய நீர் வழங்கல் சபையின் வழிகாட்டலுடன் குடிநீர் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்பிட்டி பிரதேச செயலக செயலாளரினால் பரிந்துரைக்கப்பட்ட ஐம்பதிற்கும் முற்பட்ட விண்ணப்பதாரிகளின் இல்லங்களை பார்வையிட வை எம் எம் ஏ தெரிவுக்குழு நேரடியாக களத்தில் இறங்கி பார்வையிட்டனர்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம. ரிஸ்மி தலைமையிலான இக்குழுவில் பேரவையின் தேசிய விவகார தவிசாளர் கே. என். டீன் அவர்கள் புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு முறையான பயனாளிகளை இனங்கண்டு தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் ரமழான் மாதத்தின் விஷேட வேலைத்திட்டங்களின் ஒன்றாக வறுமைக் கோட்டுக்குற்பட்ட குடும்பங்கள் தேசிய நீர் வழங்கல் சபைக்கு விண்ணப்பித்து கட்டணம் கட்ட முடியாத புத்தளம் பாலாவி {ஹசைனியாபுரம், இல்மியாபுரம், உலுக்கப்பள்ளம் ,கரம்பை பிரதேசத்தைச் சேர்ந்த இருப்பத்தைந்து பயனாளிகளுக்கு முதற் கட்டமாக நேற்று புத்தளம் உலுக்கப்பள்ளாம் பள்ளி வாசல் மண்டபத்தில் புத்தளம் மாவட்ட வை.எம்.எம்.ஏ பணிப்பாளர் முஜாஹித் நிசாரினால் நீர் வழங்கல் சபையின் மதீப்பிட்டு கட்டணத் தொகை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ். ஆர். எம். எம். முஹ்சி ,வை எம் எம் ஏ கல்பிட்டி தலைவர் இர்பான் ரிஸ்வான் , பள்ளி பரிபாலன சபைத்தலைவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜின்னாஹ் அஸ்மியா ம ஆகியோர் கலந்து கொண்டனர்.