வருடத்தில் போதையில் வாகனங்களை செலுத்தும் ஒரு இலட்சம் சாரதிகள் கைது.
போதைப்பொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக நவீன தொழில்நுட்பத்திலான ஒருதொகை உபகரணங்களை (Breathalyzer) இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதுதொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போதையில் வாகனங்களை செலுத்தும் சுமார் ஒரு இலட்சம் பேர் கைது செய்யப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.