ஹரினை கைது செய்து மௌனமாக்க அரசு முனைகிறது : பாட்டலி சம்பிக்க
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பர்ணாந்துவை கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக நடந்து வரும் நாடாளுமன்ற விவாதத்தின் போது பாட்டலி சம்பிக்க இத் தகவலை இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சி.ஐ.டி ஹரின் பர்ணாந்துவை வரவழைத்து அவரை கைது செய்ய தயாராகி வருவதாக அவர் மேலும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்னாண்டோ அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாகிவிட்டார். 20 ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற அவர் அரசாங்கத்தின் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார்.
நேற்று கூட, ஹரின் பெர்னாண்டோ அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுடார், அது இறுதியில் கட்சி-எதிர்க்கட்சி மோதலாக மாறியது.
இவை, அரசுக்கு மிகவும் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கி வருகிறது, ஹரின் பெர்னாண்டோவை எப்படியாவது மௌனமாக்க வேண்டும் என அரசாங்கத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஹரின் பெர்னாண்டோவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் அல்லது அவரது வாயை மூடிக்கொள்ள வைக்க வேண்டும் என்றும், அடுத்த சில நாட்களில் ஏதாவது ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என உள்ளக தகவல்கள் கசிந்துள்ளன.