விக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்த கிரிக்கெட் கிண்ணம் ஜொலி ஸ்டார் வசமானது.
கொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழகம், சனசமூகநிலையம், இணைந்து 30 ஆவது ஆண்டாக நடாத்தும் விக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்த 2021 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுற்றித் தொடரில் ஜொலிஸ்ரார் விளை யாட்டுக் கழக அணி 29 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
(18)திகதிஞாயிற்றுக்கிழமை கொக்குவில்இந்துக் கல்லூரிமைதானத்தில் இடம்பெற்றஇறுதியாட்டத்தில் ஜொலிஸ்ரார் விளையாட்டு கழக அணியை எதிர்த்து கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டு கழக அணி மோதிக் கொண்டன.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணியினர். களத் தடுப்பை தீர்மானித்து.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணியினர். களத்தடுப்பை தீர்மானித்து அதற்கமைய முதலில் துடுப்பெடுத்துவிளையாடி ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழக அணி 39.2ஓவர்களில் சகல இலக்குகளை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதில் சஜீகன் 61ஓட்டங்களையும், கிரிசன் 35 ஓட்டங்களையும், கல் கோபன்35 ஓட்டங்களையும், அருண்குமரன் 17 ஓட்டங்களையும்,தமது அணிசார்பாக பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் ஐனாந்தன் 5 விக்கெட்டு க்களையும், அஜித் 2விக்கெட்டுக்களையும், வீழ்த்தினர். பதிலுக்கு 215 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணியினர் 37. 1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழத்து 186 ஒட்டங்களை மட்டும் பெற்றது.
இதில் அதிகபட்சமாக , அஜித்38 ஓட்டங்களையும், டிலோசன் 30ஓட்டங்களையும் தமது அணி சார்பாக, பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் வாமனன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனுக்கான விருதினை ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக அணி வீரர் வாமனன் பெற்றுக் கொண்டார்.
ஒரு போட்டியில் தனி நபர் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரருக்கான விருதை கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணி வீரர் மதுஷன் பெற்றுக் கொண்டார்.
ஒரு போட்டியில் தனி நபர் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரருக்கான விசேடவிருதை ஜொலிஸ்ரார் அணி வீரர் றுக்ஸ்மன்.பெற்றுக் கொண்டார்.
தொடரில் அதிகூடிய விக்கெட்டினை வீழ்த்திய வீரருக்கான விருதை வட்டு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக அணி வீரர் பிரியலக்சன். பெற்றுக் கொண்டார்.
ஒரு போட்டியில் அதி கூடிய இலக்கினை வீழ்த்திய வீருக்கான விருது, தொடரில்அதிகூடிய ஆறு ஓட்டங்களைப் பெற்ற வீருக்கான விருது, தொடரில் அதிகூடிய ஒட்டங்களைப்பெற்ற வீரருக்கானவிருது,தொடர் ஆட்டநாயகன் விருதுகளை கிறாஸகொப்பர்ஸ் விளையாட்டுக் கழக அணி வீரர் அஜீத் பெற்றுக் கொண்டார்.
பிரதம விருந்தினராக யாழ்.போதனா வைத்திய சாலைமகப் பேற்று வைத்தியநிபுணர் கே.சுரேஸ் குமார் கலந்து கொண்டார்