வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தினை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் அடுத்த மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ளது.
இந் நிலையில் குறித்த பொங்கல் விழாவினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று(23) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஆலயபரிபாலன சபையினருக்கும் சுகாதார துறையினர், பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவ உயரதிகாரிகள் ஒன்றுகூடி குறித்த பொங்கல் விழாவினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறான கட்டுப்பாடுகளுடன் முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக கலந்தாலோசித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலய பொங்கல் விழாவிற்கு ஒரு மாத காலப்பகுதியிருப்பதனால் அத்தியவசிய முடிவுகள் எட்டப்பட்டதுடன் மேலும் இரு வாரங்களினுள் அடுத்த கலந்தரையாடலில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட தொற்று நோயியில் பிரிவின் வைத்திய அதிகாரி, மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி, இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், ஆலய நிர்வாக சபை அங்கத்தவர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சுகாதார துறையினர், கிராம மட்ட அமைப்பக்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் என பல தரப்பட்டடோர் கலந்து கொண்டிருந்தனர்.