வெளிநாட்டிலிருந்து வருவோரின் தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிக்கபடுகிறது
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோரை தனிமைப்படுத்தப்படும் காலத்தை மீண்டும் 14 நாட்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உலகளவில் பல புதிய கோவிட் விகாரங்கள் அடையாளம் காணப்பட்டதாலும், சில புதிதாக உருவாகியுள்ள கோவிட் அறிகுறிகளைக் காட்ட 14 நாட்கள் வரை ஆகும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார் அவர்.
வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் முன்னர் 14 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் தொற்றுநோய் நிலைமை குறைவடைந்ததன் காரணமாக 7 நாட்களாக அது குறைக்கப்பட்டது. அந்த காலத்தை மீண்டும் முன் போல நீடிக்க உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.