ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோரை 70 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோரை 70 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் , அவரது கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்தும் , அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் வெள்ளவத்தையில் வைத்தும் இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ஆதரவு வழங்கியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.