ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 700 இற்கும் அதிகமானோர் கைது! – பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 202 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், 83 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.