முல்லைத்தீவு வட்டுவாகலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞன் பலி.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
25.04.21 இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த இருரண்டு இளைஞர்களும் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதில் ஒரு இளைஞன் உயிரிழந்த நிலையில் மற்றை இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு செல்வபுரத்தினை சேர்ந்த 19 அகவையுடைய சந்திரகுமார் டிசாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன்வட்டுகாகல் கிராமத்தினை சேர்ந்த 20 அகவையுடைய செல்வக்குமார் சயந்தறூபன் என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந் இளைஞனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதி அபாய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு;ளளதுடன் வெடிப்பு சம்பம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
தாயின் கண்முன்னே மகன் வெடிவிபத்தில் சிக்கிய சம்பவம் வட்டுவாகல் பாலத்தில் குளிர்பான வியாபாரம் செய்யும் செல்வபுரத்தினை சேர்ந்த ஒரு தாயின் மகனே கண்முன்னே இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இந்த குடும்பம் நீண்டகாலமாக வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் சர்பத்,இளைநீர் வியாபராம் செய்துவருகின்றார்.
தனது பிள்ளையினை பறிகொடுத்த தாயார் இது குறித்து மருத்துவமனையில் பொலீசாருக்கு தகவல் கொடுக்கையில் தனது பிள்ளையும் அவனின் நண்பனுமான வட்டுவாகல் கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களும் தன்னிடம் சர்பத் தயாரிக்குமாறு சொல்லிவிட்டு அருகில் சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள இடத்திற்கு கையில் போணுமாக நடந்து சென்றுள்ளார்கள் திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது அருகில் எவரும் இல்லை நான் ஓடிச்சென்று பார்த்தேன் எனது மகன் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடப்பதுடன் அவனது நண்பனான சந்திறூபனும் காயமடைந்து கிடக்கின்றார்கள்.
இனது மகனின் காலில் இரண்டு இடங்களில் பாரிய காயம் ஏற்பட்டு இரத்தம் ஓடிக்கொண்டு இருந்தநிலையில் உடனே வீதியில் சென்றவர்களின் உதவியுடன் சிறிய வாகனம் ஒன்றில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் மற்ற படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளத்தொடங்கியுள்ளதுடன் குறித்த பகுதி அபாய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு இளைஞர்களின் தலைக்கவசம்,பாதணி ஆகிய காணப்படுவதுடன் வெடிப்பு சம்பவத்தின் சிதறல்கள் அருகில் உள்ள மரங்களில் சிதறு துண்டங்கள் பட்டு இருப்பததையும் அவதானிக்கமுடிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வெடிமருந்து நிபுணர்கள் வரவளைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.