கட்டுநாயக்க விமான நிலையத்தின் மக்கள் பார்வை அரங்கு மூடல்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் மற்றும் உள்நுழையும் பகுதியிலுள்ள பொதுமக்கள் பார்வை அரங்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுகின்றது என விமான நிலைய நிர்வாகம் இன்று மாலை அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரத் தன்மையை அடுத்து தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.