இலங்கையில் இன்றும் 793 பேருக்குக் கொரோனாத் தொற்று! – மொத்தப் பாதிப்பு 101,379.

இலங்கையில் மேலும் 793 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதையடுத்து கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 156 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 311ஆகப் பதிவாகியுள்ளது.
6 ஆயிரத்து 424 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.