அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படுகாயம்.

பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.
பலாலி வீதியால் பலாலி நோக்கி பயணித்த இராணுவ வாகனம் ஒன்றும் கோப்பாய் – மருதனார்மடம் வீதியால் மருதனார்மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் உரும்பிராய் சந்தியை கடக்கும்போது விபத்தில் சிக்கியுள்ளன.
சம்பவத்தில் மணல் ஏற்றிவந்த டிப்பர் கவிழ்ந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தில் இருந்த 13 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.