தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 177 பேர் கைது! – பொலிஸ் பேச்சாளர் தகவல்.

முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 177 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இப்னு ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இவ்வாறு கைதானவர்களில் 134 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் இரண்டு வாரங்களுக்கு எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.