Covid-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி நாளைமறுதினம் ஆரம்பம்.

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்பட்ட சுகாதாரத் துறையினருக்கு Covid-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி நாளைமறுதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு Covid-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 1400 பேர் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு முதல்கட்டமாக Covid-19 அன்ரோசெனேகா தடுப்பூசி வழங்கப்பட்டது.அதன் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி நாளைமறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.” என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.