விதவைத்தாய்மார்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.
புனித ரம்ழான் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை வை.எம்,எம்.ஏ. பேரவையின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் மிகவும் பின்தங்கிய விதவைத் தாய்மார்களுக்கு 5000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் வேலைத் திட்டத்தின் கண்டி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய விதவைத் தாய்மார்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கண்டி கட்டுகஸ்தோட்டை சாஹிரா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அகில இலங்கை வை. எம் எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் கண்டி மாவட்ட அமைப்பாளர் பௌஸ் ஏ. காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலருணவுப் பொதிகள் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 157 அகில இலங்கை வை. எம். எம். ஏ கிளையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட மிகவும் மிகவும் பின்தங்கிய விதவைத் தாய்மார்களுக்கான உலருணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
5000 ரூபா பெறுமதியான இந்த உலருணவுப் பொதிகளுக்குள் அரசி,பால் மா, சீனி, கிழக்கு, வெங்காயம், பருப்பு , கோதுமை, தேயிலை உள்ளிட்ட 12 வகையிலான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை இந்த அமைப்பினர் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நோன்பு ஆரம்பம் முதல் நாடளாவிய ரீதியில் வறிய ஏழைக் குடும்பங்களுக்கு 28000 கிலோ அரசிப் பைகளும் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்பால் அலி