அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம்.

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம் அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மாலைதீவுக்கான தூதுவர் ஒமர் ரஸ்ஸாக் , பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர் அ, சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே முன்னாள் கொழும்பு மாகாண சபை உறுப்பினரும் மனித உரிமைகள் அமைப்பின் ஆளுநருமான எ.ஜே. மொஹமட் பாய்ஸ் கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி திரு எஸ் சந்திரசேகரம் அவர்களுடன் பல உள்நாட்டு வெளிநாட்டு கல்விமான்களும் கலந்து சிறப்பித்து குறிப்பிடதக்கது.
இக்பால் அலி