சுவிஸ் இந்தியாவுக்கு உடனடி உதவிகளை அனுப்ப உள்ளது

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா என பல நாடுகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் என வழங்கி இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்தும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.
சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Ignazio Cassis, ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான பொருட்கள் உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.