முக கவசம் அணியாத 15 பேர் கிளிநொச்சி பொலிசாரால் கைது.
முக கவசம் அணியாத 15 பேர் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் முக கவசங்களுடன் நடமாடுமாறு பொலிசார் நேற்றுமுதல் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் நண்பகல்வரை பொலிசாரின் சோதனை நடவடிக்கையின்போது 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய குற்றத்தின் அடிப்படையில் குறித்த நபர்கள் கிளிநொச்சி நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசா்ர குறிப்பிடுகின்றனர். குறித்த நபர்கள் மீது பொலிசார் நீதிமன்றில் வழங்கு தொடரவுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் இவ்வாறு திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும், முக கவசம் இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர். இதேவேளை தேவையற்ற நடமாட்டங்கள், கூடுகைகள் தொடர்பிலும் பொலிஸ் விசேட குழு தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் எனவும், பொதுமக்கள் தற்போது உள்ள நிலைமையை கரு்ததில் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.