ஜனாதிபதி அலுவலக சேவைகள் தொடர்பாடல் ஊடகங்களின் ஊடாக…

உருவாகியுள்ள கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாளாந்த அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருவதன் சிரமத்தை கருத்திற்கொண்டு தொலைபேசி, தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க மற்றும் நிறைவேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 02 வார காலப்பகுதியில், ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு, ஒம்பூட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியம் ஆகியவற்றுடன் பின்வரும் தொலைபேசி / தொலைநகல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு –
தொலைபேசி – 0114354550/0112354550
தொலைநகல் – 0112348855
மின்னஞ்சல் – [email protected]
ஒம்புட்ஸ்மன் அலுவலகம் –
தொலைபேசி – 0112338073
மின்னஞ்சல் – [email protected]
ஜனாதிபதி நிதியம் –
தொலைபேசி – 0112354354
கிளை எண் – (4800/4814/4815/4818)
தொலைநகல் – 0112331243
மின்னஞ்சல் – [email protected]
ஜனாதிபதி ஊடகப் பிரிவு