மன்னாரைச் சேர்ந்த பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று.
யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் மன்னாரைச் சேர்ந்த பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த பொலிஸாருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வடக்கில் 25 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.