தமிழக தேர்தலில் திமுக முன்னணியில் …..
தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், சென்னையின் மற்ற 15 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் அக்கட்சியின் இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.
பிந்திய செய்தி :
திமுக 116 தொகுதிகளிலும், அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேசமயம் திமுக கூட்டணி 143 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் 16, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 3, மதிமுக 4, பாமக 6, பாஜக 4 என முன்னிலை பெற்று வருகின்றன.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, திமுக 36.86 சதவீதமும், அதிமுக 34.23 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் அதிமுகவின் முன்னிலை இருக்கிறது. ஆனால் இன்று மாலை நிலைமை அப்படியே மாறும். திமுகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்.