இலங்கையில் இன்று 1,891 பேர் கொரோனாவுடன் அடையாளம்! – ஒரே நாளில் அதிகூடிய தொற்றாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. நாளொன்றில் அதிகமான கொரோனாத் தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர். இன்று 1,891 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500ஐக் கடந்துள்ளது. நான்கு நாட்களில் 6 ஆயிரத்து 800 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 753 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா நோயாளர்களில் 97 ஆயிரத்து 242 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 13 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.