85,653 பேருக்குச் செலுத்தப்பட்டது தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்.

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இது குறித்த தகவல்களை ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை 85 ஆயிரத்து 653 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ளவர்களுக்குச் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.