உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஹேமசிறிக்கும் பூஜிதவுக்கும் எதிராக 800 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு!
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவர்களுக்கு எதிரான வழக்குகள் இரண்டு விசேட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்யப்படவுள்ளன எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 800 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த நிலையிலும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.