இலங்கையில் இன்று 1,913 பேருக்குக் கொரோனா!
ஒரே நாளில் அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவு
இலங்கையில் இன்று மாத்திரம் 1,913 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதுவே இலங்கையில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
5 நாட்களில் 8 ஆயிரத்து 713 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 666 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றாளர்களில் 98 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளனர். 14 ஆயிரத்து 748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.