இலங்கையில் மேலும் 2 இடங்கள் முடக்கம்!
இலங்கையில் மேலும் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 02 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கம்மன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்று1,939 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது