இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை கதவடைப்பு!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கிருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனாவின் புதிய மாறுபாட்டின் பரவலைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனச் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதார அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.