ரஞ்சன் கையொப்பமிட்ட பொதுமன்னிப்பு ஆவணம் சஜித்திடம்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டுள்ள பொதுமன்னிப்புக் கோரும் கடிதம் அவரின் சட்டத்தரணி ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸ ஆவணங்களைப் பெற்றுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் குறித்த ஆவணங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்துள்ளார் எனவும், அந்த ஆவணங்கள் விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.