சிறுபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கல்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குகான மானிய உரம் கமநல சேவை நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து விவசாயிகளுக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது கணேசபுரம் கமக்காரர் அமைப்புக்குட்பட்ட விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏனைய அமைப்புகளில் உள்ள விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதும் முரசுமோட்டை உள்ளிட்ட அமைப்புகள் விவசாயிகளின் உர மானிய விநியோக பட்டியலை வழங்காத காரணத்தினால் குறித்த விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது.
கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் விடுமுறை நாட்கள் மற்றும் ஏனைய நாட்களிலும் மானிய உரத்தினை உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றிவழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.