மக்கள் நீதி மய்யம் கட்சியை சீரமைக்கும் விதமாக மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால், கமல்ஹாசன் உள்பட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியை தழுவினார்.
இதற்கிடையில், தேர்தலில் சந்தித்த தோல்விக்கான காரணம் குறித்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியின் தலைமை நிர்வாகிகள் 10 பேரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பொன்ராஜ் செய்தியாளர்கள் சந்திபில் கூறியதாவது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கட்சியை சீரமைக்கும் விதமாக மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
கட்சியின் தலைமை நிர்வாகிகள் 10 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை சீரமைப்பதற்கான முழு அதிகாரத்தையும் கமல்ஹாசனுக்கு வழங்கியுள்ளோம். என்றார்.