கொரோனாத் தொற்றால் யாழில் மேலும் இருவர் மரணம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் இரண்டு வயோதிபர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண். மற்றையவர் இளவாலையைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்.
இதன்மூலம் கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் 21 பேரும், வடக்கு மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.