ஹேயஸ் தோட்டத்தில் தோட்டக் குடியிருப்பு ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பல குடும்பங்கள் பாதிப்பு.
தெனியாய ஹேயஸ் தோட்டத்தில் தோட்டக் குடியிருப்பு ஒன்று இடிந்து வீழ்ந்ததில் காரணமாக அந்த குடியிருப்பில் வாழ்ந்து வந்த 9 குடும்பங்களை சேர்ந்த 42 பேர் இஸ் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இத்தினங்களில் தெனியாய பிரதேசத்திற்கு பெய்து வருகின்ற கடும் மழையின் காரணமாக இந்த தோட்டக் குடியிருப்பு சேதத்துக்கு உள்ளாகியது.
இந்த குடியிருப்பு மேலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதன் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த மக்கள் தோட்ட நிர்வாகத்தினால் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
அத்துடன் அந்த லைன் குடியிருப்பு நூல் ஊற்று நீர் வழிந்தோடும் அதன் காரணமாக தொடர்ந்தும் அங்கு தாங்க முடியாத நிலை இம்மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இம் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாட தேவைக்கான அடிப்படை பொருட்கள் தேவை என மக்கள் கூறுகின்றனர்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்க மட்டும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.