தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து காணொலி வாயிலாக தமிழக மக்களிடம் முதல் – அமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதில் கூறியிருப்பதாவது:
முழு ஊரடங்கை அமல்படுத்தாவிடில் கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். எனவே, தமிழகத்தில் 14 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வரும் திங்கள்கிழமை முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
14 நாள்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்தால், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்துவிடலாம். ஊரடங்கின் போது மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தொற்றுப் பரவலைக் குறைத்துவிடலாம். எனவே முழு ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். சத்தான உணவுகளை உண்ணுங்கள்.
இரண்டு வாரங்களில் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டால், கட்டுப்படுத்துவது சவாலாகிவிடும். கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளது. இது கஷ்டமான காலம்தான், ஆனால் கடக்க முடியாத காரியமல்ல.
நேற்று நடத்திய அதிகாரிகள் கூட்டத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். முழு உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அந்த வகையில் கொரனோ பெருந்தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் அடைந்துள்ளது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நீங்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.