இலங்கையில் 497 ஆண்களைப் பலியெடுத்த கொரோனா! – 304 பெண்களும் சாவு.
இலங்கையில் கடந்த 02ஆம் திகதியில் இருந்து இன்று வரை 103 கொரோனாத் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 801 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 497 பேர் ஆண்கள் எனவும் 304 பேர் பெண்கள் எனவும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.