இலங்கையில் கொரோனாவால் 9 நாட்களில் 123 பேர் சாவு!
இலங்கையில் கடந்த மே முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 17 ஆயிரத்து 558 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், 9 நாட்களுக்குள் கொரோனாவால் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
மே முதலாம் திகதி ஆயிரத்து 699 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அன்றைய தினம் 9 கொரோனா மரணங்கள் பதிவாகின.
மே 2ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் ஆயிரத்து 843 பேருக்கு வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. கொரோனாவால் அன்றைய தினம் 9 பேர் பலியாகினர்.
அத்துடன், மே3 ஆம் திகதி ஆயிரத்து 913 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அன்றைய தினம் 13 பேர் உயிரிழந்தனர்.
மே 4ஆம் திகதி ஆயிரத்து 860 பேருக்குத் தொற்று உறுதியானது. அத்துடன் 11 மரணங்கள் பதிவாகின.
மே 5ஆம் திகதி ஆயிரத்து 897 பேருக்கு தொற்று உறுதியானது. அன்றைய தினம் 14 மரணங்கள் பதிவாகின.
மே 6ஆம் திகதி ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அன்றைய தினம் 11 மரணங்கள் பதிவாகின.
மே 7ஆம் திகதி ஆயிரத்து 889 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், 19 மரணங்கள் பதிவாகின.
மே 8ஆம் திகதி 22 மரணங்கள் பதிவாகின். ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்றியது.
நேற்று 10ஆம் திகதி 2 ஆயிரத்து 672 பேருக்கு வைரஸ் பரவியது. 15 மரணங்களும் பதிவாகின.