மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு இன்று நள்ளிரவு முதல் நடைமுறை!
இலங்கையில் கொரோனாத் தொற்று பாதிப்பு நிலை சடுதியாக அதிகரித்துள்ளதை அடுத்து மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்டிருக்கும் பயணக்கட்டுபாடு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 30 ஆம்திகதிவரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(10) உத்தரவிட்டிருந்தார்.
இவ் அறிவிப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று (மே-11) நள்ளிரவு முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், அத்தியவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.