நிறுவனங்களில் 25 வீதமானவர்கள் மட்டும் கடமையில் ஈடுபட வேண்டும்! – இல்லையேல் சட்ட நடவடிக்கை
நிறுவனங்களில் 25 வீதமானவர்கள் மட்டும் கடமையில் ஈடுபட வேண்டும்! – இல்லையேல் சட்ட நடவடிக்கை என்கிறார் பொலிஸ் பேச்சாளர்
இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலால் நிறுவனங்களில் 25 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண எல்லைகளில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியுள்ளார்.