நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு!

நாளை (13) இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் இதனை தெரிவிததார்.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல், குறித்த காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொர்ந்தும் இடம்பெறும் என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இன்று (12) தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்