வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமைபெற்றவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகள் என வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இதுவரை ஒரு நாள் தங்கி வெளியேற முடிந்தது. அவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், கோவிட் தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்படும்.
இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு முதல் நாள் வருகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் PCR சோதனையிலிருந்து வெளியேறலாம். இந்த ஒழுங்கு முறை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் .
இலங்கை மற்றும் வெளிநாடுகளின் எதிர்கால கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தனிமைப்படுத்தல் காலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.